தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அது மட்டுமல்லாமல் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வருகிற 17-ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.