தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று முதல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 22-ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 22ஆம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.