தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் மக்கள் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 24-ல் மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஜூலை 24-ந் தேதி 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.
இந்த முகாமில் அதிகமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை செய்ய உள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவையில் பேட்டியளித்த அவர், “சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.