தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் அரசுக்கு டாஸ்மாக் மூலமாக 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அதன்பிறகு நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் கடந்த 2020-2021 ஆம் நிதியாண்டில் அரசுக்கு 30,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் கடன் வாங்குவதில் ஜிடிபி மற்றும் 15 ஆவது நிதிக் குழு அளித்த வரம்பை தமிழக அரசு மீறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.