தமிழகம் முழுவதும் கோவில்களை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசிக்கப்படும். அதன்பிறகு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் கொரோனா முழுமையாக முடிவடைந்த உடன் பக்தி சுற்றுலாவுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். திடீரென்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளது மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories