Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்…. தேர்தல் ஆணையம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற காணொளி ஆலோசனைக்கு பிறகு மாநில தேர்தல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். திருவாரூர், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |