Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது…. தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு என முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. மேலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் இன்று அறிவித்துள்ளது.

Categories

Tech |