தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஏற்கனவே ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் ஜூன் 14-ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்ட விரோதமான மது விற்பனை நடைபெறுவதாக புகார் வருவதாகவும், அதற்காக கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவுகளை பேக் அப் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.