தமிழகத்தில் ஜனவரி நான்காம் தேதி தொடங்கி 13-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஆனால் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகை 2500 வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டிசம்பர் 26 முதல் 30 வரை டோக்கன் வினியோகம். எக்காரணத்தைக் கொண்டும் ரொக்கப் பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.