Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தடையின்றி ஆவின் பால் வினியோகம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முழு ஊரடங்கு காலத்தில் தடையின்றி ஆவின் பால் வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஆவின் பால் கொள்முதல், விற்பனையில் எவ்வித இடர்பாடும் இல்லாமல் முடுக்கி விடப்பட்டுள்ளது. பால் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் தாமதமின்றி சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |