Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தடை …. சற்றுமுன் அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வளாகத்துக்குள் மாணவர்கள், பெற்றோர் வர தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பள்ளி மைதானங்களில் மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதாகவும், தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த பெற்றோரை நேரில் அழைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |