தனியார் மருத்துவமனைகளில் அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அலட்சியப்படுத்துவது உறுதிப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதார துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்காக மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சாமிநாதன் போன்றோர் தொடங்கி வைத்துள்ளனர். இன்று தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1414 பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டிருக்கிறது. 10,703 கோடி ரூபாய் செலவில் இதுவரை 1.9 கோடி நபர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் பயன் பெற்றுள்ளனர் என கூறியுள்ளார்.
அதிநவீன வசதியோடு ரூ.35 கோடி செலவில் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இயந்திர மனிதவியல் சிகிச்சை அரங்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிதிருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனியார் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால் 104 என்ற எண்ணிற்கு புகார் எடுத்துக்கொள்ளலாம். விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் இருந்து அந்த மருத்துவமனை விலக்கி வைக்கப்பட்ட சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை என நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறோம்.மேலும் சீனா, மேற்காசிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் சுப்பிரமணியன் அரசு மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பாக ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின் மிக விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என கூறியுள்ளார்.