தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் கட்டணம் கடந்த ஆண்டு விட குறைத்து தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை அரசு வழங்கி வருகிறது.
அந்தத் தொகை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செலவிடப்படும் தொகையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கல்வி ஆண்டில் எல்கேஜி மற்றும் யுகேஜி, ஒன்றாம் வகுப்புக்கு 12,458 ரூபாய், இரண்டாம் வகுப்புக்கு 12449 ரூபாய், மூன்றாம் வகுப்புக்கு 12,578, நான்காம் வகுப்புக்கு 12,584, ஐந்தாம் வகுப்புக்கு 12083, ஆறாம் வகுப்புக்கு 17,077, ஏழாம் வகுப்புக்கு 17,106, எட்டாம் வகுப்புக்கு 17,027 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 12,076 எனவும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 15 ஆயிரத்து 711 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.