Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை…. அதிரடி அறிவிப்பு….!!!

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியேற்றினால், தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை சில தனியார் பள்ளிகள் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது.  அவ்வாறு கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைத்தால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை, கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றவில்லை எனவும் பெற்றோர்களை அவமதிக்கும் செயல் எதுவும் செய்யவில்லை என உறுதி சான்றிதழை வழங்குமாறு தனியார் பள்ளிகளுக்கு அதிரடி  உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இவ்வாறு தனியார் பள்ளிகள் மீது கல்வி கட்டணம் தொடர்பாக ஏதேனும் புகார் எழுந்தால் அந்த பள்ளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |