Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில்…. சிறப்பு வகுப்பிற்கு தடை…. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பொதுத்தேர்வு நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் மாணவர்களுக்கு சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் கட்டாயம் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் புத்தாண்டு மட்டும் புனித வெள்ளி என்று தொடர் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |