தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள இறையன்பு மக்கள் நலப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசு அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை ஏலம் விட்டு அந்த தொகையை அரசு கருவூலத்தில் சேர்க்கும்படி தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பழைய வாகனங்களை அகற்றும் பணிகள் நடைமுறைகளை துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரும் கண்டறிய வேண்டும். இதன் மூலம் பயன்பாட்டில் உள்ள வாகனங்களை நிறுத்த போதுமான இடம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.