Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தலைமறைவு ரவுடிகளை…. டி.ஜி.பி. போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று  டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் பிப்..19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அரசியல் சார்பு ரவுடிகள் “ஓட்டு சேகரிப்பு” என்ற போர்வையில் வலம் வருகின்றனர். இதனிடையில் ஓட்டுப் பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, தலைமறைவு குற்றவாளிகள் தேர்தலை சீர்குலைக்க முயற்சி செய்வர் என்பதால் இவர்களை கைது செய்து சிறையில் அடைக்க தீவிரமாக தேடி வருகிறோம். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பாக உளவு போலீசார் மூலம் தகவல் திரட்டி வருகிறோம். இவர்கள் குறித்த ரகசிய விசாரணை நடைபெறுகிறது. ஆகவே ரவுடிகள் விரைவில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என்று அவர்கள் கூறினர்.

Categories

Tech |