Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு…. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

குழந்தை திருமணத்தின் பாதிப்பு தொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களில் மட்டும் 3,326 பேருக்கு இளம் வயது திருமணத்தால் கருத்தரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை அங்கு 290 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் 2, 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் கண்காணிக்க வேண்டும்.

குழந்தை திருமணம் தொடர்பாக 1098 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்க வேண்டும. மேலும் சிறப்பு கவனம் செலுத்தி teenage pregancy மூலம் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக கிராமம் கிராமமாக துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் வாயிலாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |