Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தள்ளுபடி – முதல்வர் சொன்ன சூப்பர் செய்தி …!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், வெள்ளை அறிக்கை என்பது ஏதோ தேர்தல் நேரத்தில் திமுக வழங்கி இருக்கக்கூடிய உறுதி மொழிகளை எல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையிலேயே பின் வாங்குவதற்காக முயற்சி என்று பொருள்பட கருத்தை எடுத்து பேசியுள்ளார்கள்.

நான் நேற்று முன்தினம் நூறாவது நாள் காணக்கூடிய இந்த ஆட்சிக்கு பாராட்டு ஏற்புரையிலே சொன்னேன். எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் அளித்து இருக்கக்கூடிய வாக்குறுதியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். நீங்கள் கேட்கலாம் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம்… நகை கடன் தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொன்னீர்களே…

அதற்கு மழுப்பலான பதிலை எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள் என்ற அடிப்படையிலேயே உதயகுமார் பேசியிருக்கலாம். உறுதியாக சொல்கிறேன் வெள்ளை அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளத,  நிதிநிலை அறிக்கையில் கூட நிதியமைச்சர் பேசுகிற போது கூட குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்கள்.

நகை கடன் வழங்க வேண்டும் என்று கருதினாலும்…. அதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ததை கணக்கு போட்டு பார்க்கின்றபோதும் அதிலும் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

அதையெல்லாம் முறையாக சரி செய்து அதற்குப் பிறகு நிச்சயமாக தள்ளுபடி  செய்யப்படும் என்ற உறுதிமொழியை சொல்லி இருக்கிறோம் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கூறினார். இதனால் தமிழகம் முழுவதும் நகைக்கடன், விவசாய கடன் உறுதியாக தள்ளுபடி செய்யப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |