தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருக்கோவில்களில் மாவட்ட வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
முக ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலைத்துறை அனைத்து சேகர்பாபு அறிவுரையின்படி கோவில்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களின் தல வரலாறுகள் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படியே தற்போது மாவட்ட வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த தலங்களை தொகுத்து ஆன்மீக தளங்களுக்கு பயணிப்பவர்களுக்கு வசதியாக திருக்கோவில்களின் வழிகாட்டி எனும் பெயரில் மாவட்ட கையேடுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மென் பிரதியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கோவிலின் வரலாற்றுச் சிறப்பை பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் விதமாக விரைவு குறியீடுகளும் வெளியிடப்படும். இதனால் இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகளில் இருந்தும் தமிழர்கள் பார்த்து பயனடையும் விதமாக இத்தகைய கையேடுகள் தயார் செய்ய வேண்டும்.
மேலும் இந்த கையேடுகளை விரைவில் வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் பணிகள் முடிவடைந்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.