தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதை மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கோவில்களில் புதிய நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருக்கோவில்களில் தினசரி நடைபெறும் சேவை கட்டண சீட்டுகளை மின்னணு முறையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் திருக்கோவில்களில் கையால் எழுதும் ரசீது முறை நீக்கப்பட்டு, அனைத்து கட்டண சீட்டுகளும் கணினி வழியாக மட்டுமே வழங்கப்படும். இதனால் பக்தர்கள் எளிய முறையில் கோவில்களில் தினசரி நடைபெறும் சேவை கட்டணங்களை எளிதாக பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.