Categories
மதுரை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் திறப்பு…. அரசுக்கு 4வாரம் கெடு…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் 4 வாரங்களுக்குள் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது .

மதுரை தத்தநேரி பகுதியை சேர்ந்த சௌந்தர்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளிகள், திரையரங்குகள், பார்கள் இயங்க அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் நூலகங்கள் இயங்க அனுமதிக்கப் படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது போட்டிகள் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நூலகங்கள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக அமையும் என்பதால் அனைத்து நுலகலங்களையும் திறக்கவும்,  வழக்கம்போல் இயங்கவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு  நான்கு வாரங்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்க உத்தரவிட்டனர். கிராமப்புற நூலகங்கள் திறப்பது தொடர்பாக 8 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

Categories

Tech |