தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
பிப்ரவரி 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்கள் வாக்களிக்கலாம். 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. தேர்தலில் 2,79,52,393 பேர் வாக்களிக்க உள்ளனர். அதில் ஆண் வேட்பாளர்கள் 1,37,06,793. பெண் வேட்பாளர்கள் 1,42,45,600.