தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது.அவ்வகையில் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. ஐந்து சவரனுக்கு கடன் பெற்ற தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அனைத்து மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த மார்ச் 31 ஆம் தேதியில் நிலுவையில் இருந்தபோது நகை கடன் மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஆய்வு நடைபெறும் நாள் வரை நிலுவையில் இருந்தபோது நகைகளை வெளிமாவட்ட அலுவலர்களை கொண்ட குழு அமைத்து 100% ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வு பணி விவரங்கள் அனைத்தையும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.மார்ச் 31ம் தேதி வரை 5 சவரனுக்கு உட்பட்ட பொது நகை கடன் பெற்று அதில் சில கடன்காரர்கள் நிலுவைத் தொகையை பாதியாக செலுத்தியது நீங்கலாகவும்,தகுதி பெறாத அவர்களை நீக்கிய பின்னரும் இந்த மாதம் 1ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு நாள் வரை நிலுவையில் இருந்த 6,000 கோடி நகை கடன்களை தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைகடன் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
அதனால் தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த மாதம் ஒன்றாம் தேதி வரை வரும் வட்டியையும் அரசு ஏற்றுக்கொள்ள கூட்டுறவு நிறுவனங்களின் தள்ளுபடி தொகையை அரசு வழங்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் ஒன்றாம் தேதி வரையிலான அசல் தொகைக்கான வட்டியை கணக்கிட ஏதுவாக எந்த தொகையையும் திருப்பி செலுத்தப்படாத கடனுக்கான வட்டியையும்,பகுதியாக தொகை செலுத்தப்பட்டு இருந்தால் அந்தத் தொகையை நீக்கிவிட்டு மீதமுள்ள கடனுக்கான வட்டியை கணக்கிட்டு பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.