வெளிநாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் பரவியுள்ளது. அதனால் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு குறிப்பிட்ட புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த பயணிகள் அனைவரும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வரும் வரை சுமார் ஆறு மணி நேரம் விமான நிலையத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களை மற்ற விமான பயணிகளுடன் சேரவிடாமல் தனிமைப் படுத்துவதற்காக சென்னை விமான நிலையத்தில் புதிய வருகை பகுதி பயன்படுத்தப்படுகிறது.
தனிமைபடுத்தப்படுபவர்களுக்கு விமான நிலையங்கள் சார்பாக உணவு மற்றும் இலவச வைபை போன்ற பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன. விமானங்களில் இருந்து 40 40 பயணிகளாக இறக்கப்பட்டு கொரோணா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை போல ஆறு மணி நேரம் தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு, குழு குழுவாக பயணிகள் வெளியில் அனுப்பப்படுவார்கள். இவை அனைத்தையும் மேற்பார்வையிட தமிழக சுகாதாரத் துறை சார்பாக அந்தந்த விமான நிலையங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.