தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (03-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தென்காசி மாவட்டம்:
தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை , சாம்பவா்வடகரை உபமின்நிலையங்களில் செப்.3 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால், தென்காசி உபமின்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளான
தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகா், இராமசந்திரபட்டிணம், மேலமெஞ்ஞானபுரம்,
செங்கோட்டை உபமின்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளான செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூா், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலான்குடியிருப்பு, புதூா், கட்டளைகுடியிருப்பு,
சுரண்டை உபமின்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளான சுரண்டை, இடையாா்தவணை, குலையநேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூா், கழுநீா்குளம், ஆனைகுளம், கரையாளனூா், அச்சங்குன்றம்,
சாம்பவா்வடகரை உபமின்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளான சாம்பவா்வடகரை, சின்னதம்பிநாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய ஊா்கள் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் பிற்பகல் 1மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
திருநெல்வேலி மாவட்டம்:
அம்பாசமுத்திரம், வீரவநல்லூா், மணிமுத்தாறு, ஓ.துலுக்கா்பட்டி, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அவற்றின் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப். 3) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆழ்வான் துலுக்கா்பட்டி, ஓ.துலுக்கா்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதா்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூா், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம், அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகா், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூா், ஏா்மாள்புரம் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கடையம், பண்டாரகுளம், பொட்டல்புதூா், திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடானூா், மாதாபுரம், மயிலப்பப்புரம், வெய்க்காலிப்பட்டி, மேட்டூா் சுற்று வட்டாரங்களில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.
திருநெல்வேலி கொக்கிரகுளம் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு- தெற்கு புறவழிச்சாலை, வண்ணாா்பேட்டை, இளங்கோ நகா், பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சாா்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டம்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (செப். 3) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் (ஹவுசிங் போா்டு), செக்காலைக் கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ் நாடு மின் தொடா் அமைப்புக்கழகத்தின் காரைக்குடி கோட்ட செயற் பொறியாளா் எம். லதா தேவி தெரிவித்துள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டம்:
பழனியை அடுத்த கீரனூா் பேரூராட்சி பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீரனூா் பீடருக்கு உள்பட்ட கீரனூா், கல்துறை, சரவணம்பட்டி, நால்ரோடு, சங்கம்பாளையம், சந்தன்செட்டிவலசு, பேச்சிநாயக்கனூா், ஆண்டிநாயக்கன்வலசு, கொழுமங்கொண்டான், பனம்பட்டி, மேல்கரைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.
விருதுநகர் மாவட்டம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி, சூலக்கரை துணை மின்நிலைய மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஆகையால், காலை 9. மணி முதல் மாலை 5 மணி வரை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி, சூலக்கரை துணை மின்நிலையங்களில் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்நிலையத்தினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
புதுப்பட்டி, கோதை நாச்சியார் புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர், மொட்ட மலை, வேப்பங்குளம், சூலக்கரை கிராமம், கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் வளாகம், போலீசார் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாடர்ன் நகர், மாத்தி நாயக்கம்பட்டி ரோடு, குல்லூர் சந்தை, தொழிற்பேட்டை.
புதுக்கோட்டை மாவட்டம்:
அறந்தாங்கி, அழியாநிலை, நாகுடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே இ்ங்கிருந்து மின்வினியோகம் பெறும், அறந்தாங்கி நகர் பகுதி, அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி குரும்பூர், மறமடக்கி, ரெத்தினகோட்டை, ஆளப்பிறந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல், நாகுடி, அத்தானி, தொண்டைமாநேந்தல், மேல்மங்களம், பெருங்காடு, திணையாகுடி, மேலப்பட்டு, கட்டுமாவடி, வல்லவாரி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம்:
துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துறையூர் துணை மின் நிலையத்தில் 3-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி,
பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாபட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, டி.புதுப்பட்டி, காளிப்பட்டி, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்:
ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம்,கழுகூரணி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர்.குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே. கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதி, பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, எட்டிவயல், ரகுநாதபுரம், தெற்குகாட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, வள்ளிமாடன்வலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் 3-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.