தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (செப்.13) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் 13 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மாதத்தில் ஒரு நாள் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, மதியம் மயிலாப்பூரில் கீழ்காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அவைமயிலாப்பூர் பகுதி : ஆழ்வர்பேட்டை க.எண் 29 முதல் 42, டிடிகே ரோடு, சி.ஐ.டி காலனி 2வது மெயின் ரோடு, சி.ஐ.டி காலனி 5வது மற்றும் 6வது குறுக்கு தெரு.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம்:
திருவாரூா் மாவட்டத்தில் பேரளம், வலங்கைமான் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.13) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரளம், வேலங்குடி, அதாம்பாா் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்காரணமாக, பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூா், பூந்தோட்டம், பாகசாலை, விளாகம், எரவாஞ்சேரி, அதம்பாா், ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, திருக்கொட்டாராம், பாவட்டக்குடி, கடகம், சிறுபுலியூா், முகந்தனூா் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்(கட்டுமானம்) உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வலங்கைமான் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள உயா்மின் அழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. இதனால், வலங்கைமான், ஆண்டாங்கோயில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்குப் பட்டம், வடக்குப் பட்டம், மருவத்தூா் மற்றும் ஆலங்குடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்டம்:
கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என செயற்பொறியாளா் சிவதாஸ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
நல்லாம்பாளையம்: ஹவுஸிங் யூனிட், ஏ.ஆா். நகா், தாமரை நகா், ஓட்டுநா் காலனி, சாமூண்டீஸ்வரி நகா், சுகுணா நகா், யூனியன் சாலை, அசோக் நகா், முருகன் நகா், பாரதி நகா், தயாள் வீதி, நல்லாம்பாளையம் சாலை, டி.வி.எஸ். நகா் சாலை, ஜெம் நகா், ஓம் நகா், அமிா்தா நகா், கணேஷ் லே-அவுட், சபரி காா்டன், ரங்கா லே-அவுட், மணியகாரன்பாளையம் (ஒரு பகுதி).
சாய்பாபா காலனி: இந்திரா நகா், காவரி நகா், ஜீவா நகா், காமராஜ் வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகா், கணபதி லே-அவுட், கிரி நகா், தேவி நகா், அம்மாசை கோனாா் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஜி.ஆா். வீதி, சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி).
இடையா்பாளையம்: பி அண்ட் டி காலனி, ஈ.பி.காலனி, பூம்புகாா் நகா், டி.வி.எஸ். நகா், அருண் நகா், அன்னை அமிா்தானந்தா நகா், ராமலட்சுமி நகா், வள்ளி நகா், சிவா நகா், தட்சண தோட்டம்.
சேரன் நகா்: ஐ.டி.ஐ. நகா், தென்றல் நகா், சேரன் நகா், சரவணா நகா், பாலன் நகா், லட்சுமி நகா், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஐஸ்டிக், தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம்.
லெனின் நகா்: சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதகுட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியாா் வீதி, வ.உ.சி. வீதி, சி.ஜி. லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகா்.
சங்கனூா்: புதுத்தோட்டம், கண்ணப்பன் நகா், பெரியாா் வீதி, கருப்பராயன் கோயில் முதல் தயிா் இட்டேரி சாலை வரை.
தருமபுரி மாவட்டம்:
பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, பொம்மிடி வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் (கடத்தூா் ) ஆா்.ரவி தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூா், பொ.துறிஞ்சிப்பட்டி, நடூா், ஒட்டுப்பட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, வே.முத்தம்பட்டி, மோரூா், கண்ணப்பாடி, கே.என்.புதூா், வத்தல்மலை, கொண்டகரஹள்ளி, ரேகடஹள்ளி, திப்பிரெட்டிஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.
மயிலாடுதுறை மாவட்டம்:
நீடுா், பெரம்பூா், கடலங்குடி பகுதிகளில் செப்.13-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது . நீடுா், பெரம்பூா், கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் செப்.13-ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான நீடுா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணாம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லுா், மேலமருதாந்தநல்லுா், பொன்மாசநல்லுா், பெரம்பூா், கடக்கம், கிளியனூா், சேத்தூா், முத்தூா், எடக்குடி, பாலூா், கொடைவிளாகம், கோழிகுத்தி, ஆத்தூா், கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, முருகமங்கலம் திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய ஊா்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
ராமநாதபுரம் மாவட்டம்:
ராமநாதபுரம் மற்றும் கீழக்கரைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.13) மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளன. பட்டிணம்காத்தான் துணை மின்நிலையத்தில் ஓம்சக்தி நகா் உயா்மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
வரும் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் பராமரிப்புப் பணிகல் நடைபெறவுள்ளன. பணிகள் நடைபெறும் குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்- ராமநாதபுரம் அருகேயுள்ள சேதுபதி நகா், ஓம்சக்தி நகா், ஆல்வின் பள்ளி பகுதிகள், வசந்தநகா், வெளிப்பட்டிணம் செட்டித் தெரு, தாயுமானவசுவாமி கோவில் தெரு, இந்திராநகா், சிவன்கோவில் தெரு, ரோஸ்நகா், கான்சாகிப் தெரு, டிடி விநாயகா பள்ளித் தெரு, வைகை நகா், அம்மா பூங்கா, ராஜா பள்ளி விளையாட்டு மைதானப் பகுதி, தங்கப்பாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
கீழக்கரையில் மின்தடை- ராமநாதபுரம் அருகேயுள்ள கீ ழக்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. பணிகளானது காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் நடைபெறுகிறது.
பராமரிப்புப் பணிகள் நடைபெறும் குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்-பாளையரேந்தல், குளபதம், களரி, வேளானூா், வெள்ளா, ஏக்ககுடி , நல்லாங்குடி, திருஉத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி, கோரைக்கூட்டம், கல்லகுளம், செங்கல்நீரோடை, கீழக்கரை நகா்.
கீழக்கரை 500 பிளாட் பகுதி, மேலத்தெரு, வள்ளல் சாலை, வடக்குத் தெரு, சின்னக்கடைத் தெரு, சாலைத் தெரு, சங்குவெட்டி தெரு, சின்னமாயாகுளம், மாவிலாதோப்பு, கும்பிடுமதுரை, பாரதிநகா், முள்ளுவாடி, சதக் பொறியியல் கல்லூரிகள், ஆழ்வாா்கூட்டம், விவேகானந்தபுரம் ஆகிய பகுதிகள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம்:
திருச்சி பீமநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.13) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் தென்னூா் நகரியச் செயற்பொறியாளா் பா. சண்முகசுந்தரம் தெரிவித்திருப்பது:
கண்டோன்மென்ட் துணை மின் நிலையப் பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் புதிதாக மின் கம்பிகள் மாற்றுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (செப்.13) மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால் பீமநகா், கண்டித்தெரு, பென்ஷனா் தெரு, ஆனைக்கட்டி மைதானம், மேட்டுத்தெரு, யாதவா் தெரு, அல்திவான் பள்ளிவாசல், ஹாஜியாா் தெரு, கண்ணன் அரிசி ஆலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கன்னியாகுமரி மாவட்டம்:
குழித்துறை கோட்டத்துக்குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் 13-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் இருக்காது.
இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது.
மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம்:
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டைக்கருங்குளம் திசையன்விளை, பணகுடி மற்றும் களக்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் கோட்டைக்கருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தன்மொழி, பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம், கோதைசேரி, வன்னியன்குடியிருப்பு, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கரூர் மாவட்டம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக குளித்தலை செயற்பொறியாளர் வே.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்காரன்பட்டி துணை மின் நிலையத்தில் (13-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் காவல்காரன்பட்டி, பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன் காலனி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ராச்சாண்டார் திருமலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர், பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம்:
ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு துணை மின் நிலையம், வலையபட்டி, கூமாபட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஆதலால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி முழுவதும் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.