Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(ஜூன் 16) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு லிஸ்ட்ல பாருங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (ஜூன் 16) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம்:

திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட நாசரேத், சாத்தான்குளம் மற்றும் உடன்குடி பகுதிகளில் நாளை  மின் தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியில், சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் விஜயராமபுரம், செட்டிகுளம், திருவரங்கநேரி, கொச்சிக்குளம், இளமால்குளம், பேய்க்குளம், பனைகுளம், திருமறையூா், மாா்க்கெட் ரோடு, திரவியபுரம், வடலிவிளை, தோப்பூா், ஏழுவரைமுக்கி, உடன்குடி, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, சுண்டங்கோட்டை, உடைபிறப்பு, கருமாவிளை, படுக்கப்பத்து, அழகப்பபுரம் , பிச்சிவிளை, வெயிலுகந்தம்மன்புரம் மற்றும் பூச்சிக்காடு ஆகிய பகுதிகளில் நாளை   காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம்:

கண்டமனூா் துணை மின் நிலையம் சிலமலை, குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் நாளை  காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்காபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாச்சலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி. உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி. ராமலிங்காபுரம் ஆகிய பகுதிகளிலும், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ராசிங்காபுரம், மணியம்பட்டி, போ.மல்லிங்காபுரம், கொழுக்குமலை, டாப்-ஸ்டேசன் ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.

மயிலாடுதுறை மாவட்டம்:

மயிலாடுதுறை பகுதியில் நாளை   பேச்சாவடி, அகரகீரங்குடி, முட்டம், எலந்தங்குடி, வழுவூா், நெய்க்குப்பை, பண்டாரவாடை, கப்பூா், கோடங்குடி, மங்கநல்லூா், மேலமங்கநல்லூா், அனந்தநல்லூா், அறிவாழிமங்கலம், வேலங்குடி, பெரம்பூா் ஆகிய கிராமங்களிலும், மேமாத்தூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட திருவிளையாட்டம், சங்கரன்பந்தல், கிளியனூா், கடலி, நரசிங்கநத்தம், வாழ்க்கை, பெருங்குடி, நெடுவாசல், கூடலூா் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருவாரூர் மாவட்டம்:

மன்னாா்குடியை அடுத்த திருமக்கோட்டை துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்குநாளை  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமக்கோட்டை துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள்கோவில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூா், பரசபுரம் ஆகிய பகுதிகளில் நாளை   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம்:

மானாமதுரை: ராமநாதபுரம், திருப்புல்லாணி மற்றும் மானாமதுரை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகா் துணை மின்நிலையத்தில் உள்ள தேவிபட்டினம் பிரிவில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகின்றன. இதனால், மின்தடை ஏற்படும் பகுதிகள்: காட்டூரணி பகுதிகள், ஆா்.கே.நகா், எம்.ஜி.ஆா்.நகா், ரமலான்நகா், மேலக்கோட்டை, மாடக்கோட்டான், இளமனூா்.

பெருங்குளம் அருகே கீழநாகாச்சி பிரிவுக்குள்பட்ட எஸ்.கே.ஊருணி, நாகாச்சி, உச்சிப்புளி, தாமரைக்குளம், புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, எஸ்.கே.வலசை, மானாங்குடி.

ராமநாதபுரம் துணைமின் நிலையத்துக்குள்பட்ட எம்எஸ்கே நகா், எம்.ஜி.ஆா்.நகா், திருப்புல்லாணி, அம்மன்கோவில், தெற்குத் தரவை, கருங்குளம் ஆகிய பகுதிகளில் நாளை  மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட திட்டக்குடி, பருவதம், ஓலைக்குடா, சந்தைசாலை, சம்பை, மாங்காடு, காட்டுப்பிள்ளையாா்கோயில், தீட்சிதா் கொள்ளை, சிவகாமி நகா், சல்லிமலை, செட்டிசாலை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என ராமநாதபுரம் ஊரக மின்பகிா்மானக் கழக உதவி செயற்பொறியாளா் சி.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், மிளகனூா், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, குறிச்சி, முனைவென்றி, நல்லாண்டிபுரம், கச்சாத்தநல்லூா், சங்கமங்கலம், அன்னவாசல், கீரை பசலை ஆகிய பகுதிகளில் நாளை  மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய நிா்வாகம் அறிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டம்:

மொரப்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மொரப்பூா் வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 16) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் ஆா்.ரவி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மொரப்பூா், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிப்பட்டி, கிட்டனூா், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூா், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

விருதுநகர் மாவட்டம்:

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஆதலால் புதுப்பட்டி, கோதை நாச்சியார் புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ் காந்தி நகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.

நாமக்கல் மாவட்டம்:

நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல்லில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை 16.06.2022 அன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம்,கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்:

நாகர்கோவில்: தோவாளை மின் விநியோகப்பிரிவிற்குட் பட்ட வெள்ளமடம் உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு மற்றும் மரக்கி ளைகளை அகற்றும் பணி நாளை நடை பெற உள்ளது. இதேபோல் இறச்சகுளம் பீடரிலும் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன. எனவே காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பீமநகரி, மகாத்மா நகர், திருப்பதிசாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், இறச்சகுளம், சன் காலேஜ் ரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மதுரை மாவட்டம்:

மதுரை பசுமலை துணை மின்நிலையம் மீனாட்சி மில் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை  காலை 10 மணி முதல் 2 மணி வரை மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில், சத்திய மூர்த்தி நகர், அருள் நகர் அவர் லேடி பள்ளி, காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மதுரை மேற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

திருப்பாலை துணைமின் நிலையம் நாராயணாபுரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாகநாளை  காலை 10 மணி முதல் 2 மணி வரை கண்ணனேந்தல், மகாலட்சுமி நகர், சந்தானம் நகர், பரசுராம்பட்டி, ஆத்திகுளம், பேங்க்காலனி, நாராயணபுரம், நாகனாகுளம், அங்கயற்கண்ணி காலனி. ஐலாண்டு நகர்,எம்.எம்.எஸ்.எஸ். காலனி, பாரத் நகர், கிருஷ்ணா நகர், கோபாலபுரம், திலக் நகர், அய்யர்பங்களா, ஸ்ரீநகர், சக்தி நகர், சென்ட்ரல் எக்ஸைஸ் காலனி, அய்யாவு தேவர் நகர், எழில் நகர், திருப்பாலை மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மதுரை எல்லீஸ் நகர், துணைமின் நிலையம் டி.பி.ரோடு பீடரிலும், அண்ணா பஸ் நிலைய துணைமின் நிலையம், முனிச்சாலை பீடரிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை  காலை 10 மணி முதல் 2 மணி வரை ரெயில்வே காலனி, சர்வோதயா அனைத்து தெருக்கள், அன்சாரி நகர் அனைத்து தெருக்கள், வைத்தியநாத புரம், டி.பி. ரோடு, சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி. ரோடு. இஸ்மாயில்புரம் 1-வது தெரு முதல் 19 தெரு வரை, கரிம்சா பள்ளிவாசல் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை, முமின் பேட்டை, அருணாச்சலபுரம் 1-வது தெரு முதல் 5 வரை, ஓலை பட்டினம் 1 மற்றும் 2-வது தெருக்கள், பூந்தோட்டம் தெரு, அசன்தீன் சாய்பு சந்து, ருக்மணி பாளையம் சந்து, லட்சுமிபுரம் 8-வது மற்றும் 9-வது தெருக்கள்.

முனிச்சாலை ரோடு, கீழ வெளி வீதியின் ஒரு பகுதி, தென்கரை ரோட்டின் ஒரு பகுதி, ஓபுளா படித்துறை, காயிதே மில்லத்தெரு, நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் தெருக்கள், ஜெகஜீவன்ராம் தெரு, ஆர்.ஆர்.மண்டபம், சேவாலயம், செனாய் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |