தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(ஜூலை 5) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம்:
பேரளம், வேலங்குடி, அதம்பாா் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. பேரளம், வேலங்குடி, அதாம்பாா் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக இந்த மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூா், பூந்தோட்டம், பாகசாலை, விளாகம், எரவாஞ்சேரி, அதம்பாா், ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, எடக்குடி ஆகிய பகுதிகளுக்கும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூர் மாவட்டம்:
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக குரும்பலூா், பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மின் விநியோகம் இருக்காது. மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் குரும்பலூா், பாளையம், புது ஆத்தூா், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூா் பிரிவு சாலை, சிறுவயலூா், குரூா், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூா், கீழக்கணவாய், பொம்மனப்பாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர் மாவட்டம்:
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மின் விநியோகம் இருக்காது. சேதுபாவாசத்திரம், பெருமகளூா், நாட்டாணிக்கோட்டை, ஆதனூா், குருவிக்கரம்பை, திருவத்தேவன், கட்டயங்காடு, மதன்பட்டவூா், கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூா், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம்:
மேலூா், கொட்டாம்பட்டி, தனியாமங்கலம், ஒத்தக்கடை, திருப்பாலை, பனையூா் துணை மின்நிலையப் பகுதிகளில் உள்ள உயா் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் ஜூலை 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளன. எனவே, இந்த துணை மின்நிலையங்களின் மூலம் பயனடையும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை மின் விநியோகம் தடைப்படும்.
சிவகங்கை மாவட்டம்:
சிவகங்கை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மருதுபாண்டியா் நகா், மாவட்ட ஆட்சியா் வளாகம், மஜித் சாலை (1-ஆவது தெரு முதல் 12 ஆவது தெரு வரை), செந்தமிழ் நகா், புதூா் சாலை, காருண்யா நகா், வாரச்சந்தை சாலை, காந்தி வீதி, குளக்கால் தெரு ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்:
பட்டினம்காத்தன் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அடுத்துள்ள பட்டினம்காத்தன் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெற உள்ளன. எனவே பாரதி நகா், நேரு நகா், மகாசக்தி நகா், புலிக்காரத் தெரு, குமரையா கோயில் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
கன்னியாகுமரி மாவட்டம்:
நாகர்கோவில் பூதப்பாண்டி மின் விநியோகப் பிரிவுக்குட்பட்ட வெள்ளமடம் பீடரில் ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் ஞானதாசபுரம் பகுதி உயர்மின்னழுத்த பாதையில் 5-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை ஈசாந்தி மங்கலம், நாவல்காடு மற்றும் ஞான தாசபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. ஆரல்வாய்மொழி மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட உயர் மின் அழுத்த ப்பாதையில் 5 மற்றும் 6-ந் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே 5-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை குருசடி, தேவசகாயம் மவுண்ட், மங்கம்மாள் சாலை பகுதி களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
சென்னை
சென்னையில் நாளை(ஜூலை 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், கிண்டி, ஐடி காரிடர், ஆவடி, வேளச்சேரி, அடையாறு, வியாசர்பாடி, கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் பகுதி : முண்டக்கண்ணியம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் கோயில் தெரு, அப்பாதுரை கோயில் தோட்டம் மற்றும்இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
எழுப்பூர் பகுதி : ராமனுஜம் தெரு, முனியப்பா தெரு, வால்டாக்ஸ் சாலை, அண்ணாபிள்ளை தெரு, துலசிங்கம் தெரு, டி.வி பேசின் தெரு, சின்ன தம்பி தெரு, வீரப்பன் தெரு, கல்யாணபுரம், ரமனன் சாலை, கோவிந்தப்பா தெரு, கொண்டித்தோப்பு தெரு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் பகுதி: மாடம்பாக்கம் வேங்கைவாசல், இந்திரா நகர், ஜி.வி நகர் பெரும்பாக்கம் மூவேந்தரா தெரு, அம்பேத்கர் தெரு, கஜேந்திரன் நகர், ராம் கார்டன் ஈ.டி.எல் ஐஐடி காலனி பகுதி, ஆறுமுகம் நகர் பகுதி, வி.ஜி.பி சாந்தி நகர், வ.உ.சி தெரு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி: மடிப்பாக்கம் தனகல் சாலை, குளக்கரை தெரு நந்தம்பாக்கம் வன்னியர் தெரு, ராமசந்திரா நகர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஐடி காரிடர் பகுதி ; ஆனந்தா பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, எழில் நகர், ஒ.எம்.ஆ பகுதி, டி.வி.எச் அப்பார்ட்மென்ட் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி பகுதி : திருமுல்லைவாயில் சாந்திபுரம், மணிகண்டபுரம், கலைஞர் நகர் ஐஐடி காந்தி மண்டபம் ரோடு, நாயுடு தெரு, கொட்டூர்புரம் குடியிருப்பு, சயின்ஸ் சிட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அடையார் பகுதி : பெசன்ட் நகர் 4வது மெயின் ரோடு, 3வது மற்றும் 5வது அவென்யூ, திருவள்ளுவர் நகர், பஜனை கோயில் தெரு ஈஞ்சம்பாக்கம் ஈஞ்சம்பாக்கம் குப்பம், கங்கையம்மன் கோயில் தெரு, பல்லவன் நகர், ஈ.சி.ஆர் ரோடு, ராஜீவ் அவென்யூ திருவான்மியூர் கண்ணாப்பா நகர், ஸ்ரீராம் அவென்யூ, சுவாமிநாதன் நகர், சுப்பிரமணி தெரு, அவ்வை நகர் மெயின் ரோடு, களத்துமேடு 1 முதல் 9 வரை தெரு, செல்வராஜ் அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசர்பாடி பகுதி : கே.எம்.ஏ கார்டன், கே.ஏ கோயில், தென்றல் நகர். திருத்தங்கல் நகர் அசோக் நகர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே பகுதி : சின்மையா நகர் சாய் நகர் அனக்ஸ், காளியம்மன் கோயில் தெரு, சின்மையா நகர் பகுதி, காந்தி தெரு, வாரியர் தெரு, ராஜீவ் காந்தி தெரு, கண்ணகி நகர் தெற்கு, தாங்கல் தெரு, எஸ்.பி.ஐ காலனி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.