பெரம்பலூர் மாவட்டம்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, அ.மேட்டூர் மற்றும் கை.களத்தூர் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், பெரியசாமி கோவில், அரசடிக்காடு, மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம் ஆகிய ஊர்களிலும். கை.களத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்திநகர் ஆகிய ஊர்களிலும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார விநியோகம் இருக்காது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் துணை மின்நிலையம் மற்றும் தேனி மாவட்டம் கண்டமனூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ரெங்கநாதபுரம், தேவிநாயக்கன்பட்டி, கல்வாா்பட்டி, காசிபாளையம், நல்லபொம்மன்பட்டி, வாங்கலாபுரம், ராசாகவுண்டனூா், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூா், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, உதவி செயற்பொறியாளா் சு. ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதேபோல், கண்டமனூா் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும், கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாச்சலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என, தேனி மின் வாரியச் செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.
அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் 21-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அய்யம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, தேவரப்பன்பட்டி, சித்தரேவு, அய்யங்கோட்டை, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரிய செயற் பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம்:
கல்லிடைக்குறிச்சி மின்கோட்டத்துக்கு உட்பட்ட கரிசல்பட்டி, சேரன்மாதேவி, மேலக்கல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மாதேவி, கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மேலக்கல்லூர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளங்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம்:
கோவை மயிலம்பட்டி துணைமின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆா்.ஜி.புதூா், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி, ஆண்டக்காபாளையம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்:
கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஜூலை 21-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கிருஷ்ணகிரி நகா், தொழிற்பேட்டை, பவா்ஹவுஸ் காலனி, சந்தைப்பேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகா், வீட்டுவசதி வாரியம் பகுதி எண்-1, எண் – 2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆடவா் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, தானம்பட்டி, கொண்டேப்பள்ளி, பில்லனகுப்பம், சாமந்தமலை, தளவாய்ப்பள்ளி, நெடுமருதி, கே.திப்பனப்பள்ளி, பி.கொத்தூா், கல்லுகுறுக்கி, மேல்பட்டி, பூசாரிப்பட்டிமற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தென்காசி மாவட்டம்:
கடையநல்லூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட நாரணபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கின்றன. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழபுதூர், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளாளங்கோட்டை, தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
அதேபோல் மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அங்கு இருந்து மின் வினியோகம் பெறும், மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, குறிஞ்சாகுளம், புதுப்பட்டி, ஆவுடையார்புரம், குண்டப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.