தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு புள்ளி 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் பெயர் சேர்க்க மட்டும் 4,44,019 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனைப் போலவே நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in, voterportal.eci.gov.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முழுவதும் நாளை இரண்டாம் கட்ட வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும், முகவரி மாற்றம் செய்வதற்கும் இந்த முகாமை அணுகலாம் என அரசு அறிவித்துள்ளது.