தமிழகத்தில் ஒவ்வொரு முக்கிய பண்டிகைகளின் போதும் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த வாரம் பொங்கல் பண்டிகை அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிப்பு என்ற செய்தி வெளியான உடனே மது பிரியர்கள் டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
Categories