Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.19) மாலை 5-6 மணி வரை இவர்களுக்கு அனுமதி…. தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (பிப்.19) நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், “தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மூவர் உள்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை நகரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் தங்கியிருந்த வெளியூரைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டனர். கோவை மாவட்டத்திற்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை நகர் பகுதியில் மட்டும் 2,723 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் 5,960 வாக்குச்சாவடிகள் வெப் ஸ்ட்ரீம் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் மாலை 5-6 மணி வரை வாக்களிக்கலாம்.

அவர்களுடைய சான்றிதழை காட்டி வாக்களிக்கலாம். இதுவரை மொத்தம் ரூ.11.89 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தை பொறுத்தவரை பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டியுள்ளது. சட்ட விதிகளை கொண்டு வந்த பிறகு, அடுத்த தேர்தலில் நோட்டா பயன்படுத்தப்படும். தேர்தலை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |