தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவிப்பு வெளியானது. பொது மக்களின் தேவைக்காக நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோயம்பேடு உள்ளிட்ட தமிழகத்திலுள்ள மொத்த விற்பனை செய்யும் காய்கறி, பழ அங்காடிகள் நாளை முதல் செயல்பட அனுமதி அடித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் தொடர்ந்து திறந்திருக்கும். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை கடைகள் செயல்படும். அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்துள்ளது.