தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்., அப்போது சென்னையில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படஉள்ளது.
தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளிலும் திங்கட்கிழமை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திறக்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார்.