தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் விற்பனை பத்திரங்கள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. நாளை முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை விற்பனை பத்திரங்கள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி வீட்டுவசதி வாரியத்தில் அனைத்து கோட்டம், பிரிவு அலுவலகங்களில் விற்பனை பத்திரம் வழங்கும் முகாம் நடைபெறும். மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் உடனடியாக செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
Categories