Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை ரத்து…. சற்றுமுன் அமைச்சர் திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் 8வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். ஆனால் நாளை நடைபெற இருந்த முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக 14 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.அதன் காரணமாக அந்த மாவட்டங்களில் முகாம்கள் அமைப்பது சிரமம் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் தற்போது தீபாவளி பண்டிகையாக இருப்பதால் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். இந்த சமயத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தினால் அவர்கள் விடுமுறையை ரத்து செய்து விட்டு வேலைக்கு வரும் சூழல் உருவாகும். இது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்த வாரம் தடுப்பூசி முகாம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தேடிச்சென்ற தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஃ1

Categories

Tech |