Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை வரை – அதிரடி உத்தரவு

கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படாத சூழ்நிலையிலும் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வசூல் செய்வது தொடர்பான விவாதங்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வருகின்றது.

தமிழக அரசு நீதிமன்றத்தில் 3 தவணையாக தனியார் சுயநிதி கல்லூரிகள் கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த நிலையில், பள்ளிகளுக்கான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் தற்போது அனைத்து ஒரு தனியார் பள்ளிகளுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதில், தனியார் பள்ளிகள் நாளை வரை எவ்விதமான கட்டணங்களும் வசூலிக்க கூடாது. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முடிவை தெரிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கல்வி கட்டணம் தொடர்பாக தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு உள்ள நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |