தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்ததையடுத்து தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன் மூலமாக நாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது வரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தின் நடந்துள்ளது. அதன்மூலம் 2 கோடியே 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் 15வது தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது. அதன்படி தமிழக முழுவதுமாக 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.