தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(12-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம்:
கோவிலூா் அருகே மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.12) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவிலூா் துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (செப்.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், ஆலங்குடி, அப்பல்லோ மருத்துவமனை, செட்டிநாடு பப்ளிக் பள்ளி பகுதிகள், இளங்குடி, தட்டட்டி, கொரட்டி, நாச்சியாபுரம், கம்பனூா், வலையப்பட்டி, கொங்கரத்தி, கண்டரமாணிக்கம், கீழ்பட்டமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.
திருப்பூர் மாவட்டம்:
அவிநாசி கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை செப்டம்பா் 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கானூா்புதூா் துணை மின் நிலையம்: அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூா், ஆலத்தூா், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூா் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி.
பசூா் துணை மின் நிலையம்: பூசாரிபாளையம், இடையா்பாளையம், செல்லனூா், ஆயிமாபுதூா், ஒட்டா்பாளையம், ஜீவா நகா், பூலுவபாளையம், அன்னூா், மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதூா், அம்மாசெட்டிபுதூா், புதுப்பாளையம்.
விருதுநகர் மாவட்டம்:
விருதுநகர், அல்லம்பட்டி பகுதியில் மின்பாதை பராமரிப்பு பணிகள் திங்கட்கிழமை நடக்கிறது. ஆதலால் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை காந்திநகர், எம்.ஜி.ஆர். நகர், எம்.ஜி.ஆர். காலனி, டால்பின் நகர், அனுமன் நகர், காமராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.