Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நிரம்பிய அணைகள்…. விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். கடந்த வருடம் அக்டோபர் 28ஆம் தேதி பருவமழை தொடங்கியது. இரண்டு புயல்கள் உருவானதால் அதிக அளவு மழை கிடைத்தது. இயல்பை விட 6 சதவீதம் அதிக மழை தமிழகத்திற்கு கிடைத்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிக அளவு மழையை கொடுத்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

மேட்டூர் அணை 101 அடியையும், முல்லைப் பெரியாறு அணை 137 அடியையும் எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பில்லார் அணை, பவானிசாகர் அணை, சோலையாறு அணை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கெலவரப்பள்ளி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |