Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நெல் மூட்டைகளைக் கொண்டு செல்ல…. இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

வானங்களில் நெல் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கு ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையின் பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தப் பிரிவு சனிக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பில், பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஆபாஸ்குமாா் உத்தரவின்படி போலீஸாா், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சோ்ந்து வாகனங்களில் நெல் மூட்டைகள் முறையான ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படுகிறதா எனக் கண்காணிக்கின்றனா்.

தமிழக விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நெல் மூட்டைகளும், தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் நெல் மூட்டைகளும் அரசின் ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படுகிறதா என காவல்துறை சோதனைச் சாவடிகளிலும், சுங்கச்சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

ஆகவே விவசாயிகள், நெல் கொள்முதல் வியாபாரிகள், வாகன உரிமையாளா்கள், அரிசி ஆலை உரிமையாளா்கள், வாகன ஓட்டுநா்கள் போன்றோர் நெல் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கு தமிழக அரசால் வழங்கப்படும் படிவம் வைத்திருக்க வேண்டும். இதனிடையில் காவல்துறை மாற்று வருவாய்த்துறை அதிகாரிகள் தணிக்கை செய்யும்போது அந்தப் படிவம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே வருவாய்த் துறை அதிகாரிகள், பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், நெல் வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளா்கள், லாரி உரிமையாளா்கள் ஓட்டுநா்கள் போன்றோர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், கோயம்புத்தூா், பொள்ளாச்சி, திருச்சி, அரியலூா் தஞ்சாவூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மதுரை, விருதுநகா், உத்தமபாளையம் ஆகிய 13 இடங்களில் நடைபெற்றது.

அதில், உற்பத்தியாளா்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அதிகாரிகள் எடுத்துரைத்தனா். அதுமட்டுமல்லாமல் உற்பத்தியாளா்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், அதை சரி செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. சட்டவிரோதமாக நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் அடிப்படையில் திருவள்ளூா், வேலூா் ,விழுப்புரம், கோயம்புத்தூா், பொள்ளாச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, உத்தமபாளையம், குழித்துறை போன்ற 10 இடங்களில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடி, சுங்கச்சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை நடைபெறுகிறது.

 

Categories

Tech |