Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு அரசு சற்றுமுன் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தமிழக அரசே பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நாள் குறிப்பிடப்படாமல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர் இணை காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 செலுத்த வேண்டும். அனைத்து கிராமங்களும் இந்த திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.

‘பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். முன்னதாக சம்பா மற்றும் தாளடி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |