Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரபரப்பு – அலார்ட் கொடுத்த எடப்பாடி …..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது.

துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் மாதம் அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து 2019 பிப்ரவரி 27 இல் உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்தநிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ் சிவஞானம், டி. பவானி சுப்பராயன் அமர்வு இன்று தீர்ப்பளித்திருக்கிறது. 39 நாட்கள்  நடந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வாதங்கள் முடிந்த நிலையில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேற்று இரவு தமிழக முதல்வருடன் டிஜிபி திருப்தியுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |