Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரவிய ஃப்ளூ காய்ச்சல்….. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் தற்போது தான் கொரோனா வைரஸின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய குழந்தை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.

ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், இருமல் ஆகியவை ப்ளூ காய்ச்சலின் அறிகுறியாகும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டால் குணமாக 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும். சிலருக்கு ஒரு வாரம் கூட ஆகலாம். மேலும் ப்ளு வைரஸ் பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் துளிகள் மூலம் மற்றவருக்கு எளிதில் பரவும். அதனால் காய்ச்சல் உள்ளவர்கள் தனிமையில் இருப்பது சிறந்தது. முடிந்த அளவு கொதிக்க வைத்து நன்கு ஆற வைத்த நீரை பருகுவது நல்லது.

Categories

Tech |