தமிழகத்தில் தீபாவளிக்கு பிறகு தினமும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.24 ஆம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து இன்று வழக்கம் போல இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1578 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு திரும்ப 2050 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
அதனைப் போலவே நாளை வழக்கம்போல் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 854 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 1130 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றது. மேலும் இந்த மூன்று நாட்களும் வழக்கம் போல இயக்கப்படும் 6300 பேருந்துகள் 6852 சிறப்பு பேருந்துகள் என்ற மொத்தம் 13,152 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.