கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பல மாணவர்கள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலகளித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் தனியார் பள்ளி இந்த ஆண்டு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான நெறி முறையை தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளிகளின் கட்டணம் தொடர்பான அனைத்தை விவரங்களையும் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.