Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாத சூழல் நிலவி வருகிறது. தற்போது வரை அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மாணவர்கள் தான் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது..

அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதிலிருந்து உதிரும் இலைகளால் குப்பை உண்டாகிறது. மழைக்காலங்களில் இந்த குப்பைகள் மலையில் நனைந்து கட்டிட உறுதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும். அதனால் இலைகளையும் சருகுகளையும் அகற்ற வேண்டும்.தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி வளாகங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களை ஒருபோதும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. இதற்காக உள்ளூர் மக்கள் அல்லது 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக பள்ளியில் உள்ள அறிவிப்பு பலகையில் நடமாடும் மருத்துவக் குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர்களின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |