தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆர்.எஸ். வகுப்புகளுக்கு கட்டாயம் அனுமதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை இயக்கம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், உக்கரை நாட்டில் ஏற்பட்ட போரில் அங்கே சிக்கித் தவித்து வந்த மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதேபோல மியான்மர் நாட்டிலும் தவிக்கும் மாணவர்களை முதல்வர் மீட்க நடவடிக்கை எடுப்பார்.
மேலும் பாஜக விமர்சனம் செய்வது குறித்து அவரிடம் கருத்து கேட்டதற்கு, நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தவர்கள் பேசும் தேவையில்லாத கருத்து நினைக்காமல் நல்ல விதமாக பணிகளை செய்வோம் என்று முதல்வர் அவர்கள் கூறியுள்ளார். தமிழக முழுவதும் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் பொது இடங்களில் பேரணிக்கு அனுமதி வழங்கி உள்ளது நீதிமன்றம். அதற்கு எதிராக நாம் செயல்படக்கூடாது என நீதிமன்றம் கட்டுப்பாட்டு விதித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டி பேசி உள்ளார்.