Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கல்விக்கட்டணம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.

இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி, ஐசிஎஸ்இ மற்றும் ஐபி பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான கல்விக்கட்டணம் 75% மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பேருந்து கட்டணம், சீருடைக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என்றும், 75% கல்வி கட்டண விபரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |